தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் இயக்கிய திரைப்படங்கள் என்றால் துரோகி, இறுதிசுற்று, சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்கள் ஆகும். மேலும் இவர் இயக்கிய 3 திரை படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கி கௌரவித்து கொடுத்தது.
இந்நிலையில் கடைசியாக அவர் எடுத்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தினை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறாராம் இவ்வாறு உருவாகும் அந்த ஹிந்தி திரைப்படத்தினை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் மற்றும் சுதா கொங்கரா கலந்து கொண்டார்கள். இதில் மாதவன் சுதா கொங்கரா இயக்கத்தில் ஏற்கனவே இறுதிசுற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படமானது குத்துச்சண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இதில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருப்பார்.
மேலும் இந்த திரைப்படத்தில் மாதவனின் என்று மிகத் தரமாக இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக கெத்து காட்டி இருப்பார். இந்நிலையில் நடிகர் மாதவன் மேடையில் பேசும் பொழுது நான் பார்த்த இயக்குனர்களில் பவர்ஃபுல்லான இயக்குனர் என்றால் அது சுதா கொங்கரா தான் என கூறியுள்ளார். இவர் ஒரு ஜல்லிக்கட்டு காளை போல.
இவ்வாறு நடிகர் மாதவன் பேசிய வார்த்தைகள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் மாதவனை மீண்டும் நமது இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிக்க ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் சூரரைப்போற்று ஹிந்தி திரைப்படம் முடித்த பிறகு அஜித் மற்றும் சிம்பு திரைப்படங்களை இயக்க உள்ளாராம் நமது இயக்குனர்.