தேசிய விருது பெற்றவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசிய பிரபல நடிகர்.! அவர்தான் எனக்கு ரோல் மாடலும் கூட.. சொன்னது யார் தெரியுமா.?

ajith
ajith

சினிமா உலகில் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் தேசிய விருதை கொடுத்து அழகு பார்த்து வருகிறது இந்திய அரசு .  நேற்று 67வது தேசிய விருது விழாவை கோலாகலமாக நடத்தியது. தமிழ்நாட்டு சார்பில் பல நட்சத்திர பிரபலங்கள்  பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, டி இமான், எஸ் கலைபுலி தாணு, வெற்றிமாறன், பார்த்திபன்  ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை தட்டிச் சென்றனர். அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதான  தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

விருதை பெற்ற உடன் அந்தந்த பிரபலங்கள் இணைந்தும், தனித்தனியாகவும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் ஷேர் செய்தனர் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி ரசிகர்கள் கொண்டாட வைத்த நிலையில் தற்போது கேரளா சிறுவனான ஒருவர் நாக விஷால் கேடி படத்திற்காக குழந்தை நட்சத்திரத்திற்கான  விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் நாக விஷால். அப்போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் கூறி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தமிழ் சினிமாவில் உங்களது ரோல் மாடல் யார் என கேட்டனர் அதற்கு பதிலளித்த அவர் எனக்கு ரோல் மாடல் தல அஜித் தான் அவரை தான் பெரிதாக பின்பற்றி வருகிறேன் என கூறினார்.

செய்தியை தற்போது தல ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு அந்த பையனை வாழ்த்தியும் வருகின்றனர் நீங்கள் நிச்சயம் ஒரு கட்டத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பீர்கள் எனவும் கூறி வருகின்றனர்.