பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்று இருக்கும் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமா உலகில் ரஜினி, விஜய், அர்ஜுன், கமல் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஷங்கர் தெலுங்கு பக்கம் தனது திசையை திருப்பி நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இது ராம் சரணுக்கு 15வது படம். இந்தப் படத்தில் இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கர், கமலை வைத்து இந்தியன் 2 படத்தை மீண்டும் எடுத்து உள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதாவது அண்மையில் எனக்கு பிடித்த வில்லனாக விஜய் சேதுபதி மாறி உள்ளார் என கூறி உள்ளார் ஒரு மாஸ் ஹீரோ தற்போது வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்துகிறார்.
குறிப்பாக அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக இருக்கின்றன மேலும் அவர் வில்லனாக நடிக்கும் போது அவரது நடிப்பு வேற லெவெலில் இருக்கிறது. எனக்கு பிடித்த வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார் என கூறினார்.
மேலும் தான் இனி இயக்கும் படங்களில் விஜய் சேதுபதியை வைத்து இயக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் அப்படி என்றால் இனி ஷங்கர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் என தெரியவருகிறது. இந்தியன் 2 படத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதிக்கு நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.