விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது பிரபலமடைந்து வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை சிவாங்கி.
இவரின் குரல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான கும் வித் கோமாளி சீசன் 3-யில் கோமாளியாக பங்கு பெற்று வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்து வரும் இவர் தளபதியை நேரில் சந்திக்க வேண்டுமென பல நாட்களாக கனவுடன் இருந்து வந்தார்.
பிறகு நீண்ட நாட்கள் கழித்து விஜயை சந்திக்க பிரபல நடிகர் ஒருவர் சிவாங்கிக்கு உதவி செய்துள்ளார். எனவே தற்போது சிவாங்கி அந்த நடிகருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். சிவாங்கி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
எனவே வெகுநாட்களாக விஜயை பார்க்க வேண்டும் என்று நினைத்து வந்த இவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனும் சிவாங்கியும் அண்ணன் தங்கைகளாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் சிவாங்கி சிவகார்த்திகேயனிடம் இதனைப் பற்றி கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜாலிலோ ஜிம்கானா என்ற பாடலின் படப்பிடிப்பின் போது சிவாங்கி சிவகார்த்திகேயனின் உதவியால் விஜய் பார்ப்பதற்காக நேரில் சென்று அங்கு அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
எனவே அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஜாலியோ ஜிம்கானா பாடல் படப்பிடிப்பின்போது விஜய் சந்தித்தேன் என்றும் அவருடைய அன்பான வார்த்தைகள் என் மனதில் எப்பொழுதும் இருக்கும் என்றும் இந்த சந்திப்புக்கு எனக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
This happened 🥶🥶 Thankyou @actorvijay sir for the kind words❤️ @Siva_Kartikeyan anna thankyou na❤️ pic.twitter.com/CwbLZcCQoW
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 26, 2022