தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து வருகிறார். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது அந்த வகையில் விஷ்ணு விஷால் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் விஷ்ணுவிஷால் உருகி உருகி காதலித்த தனது காதலியான ரஜினியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்துகொண்ட சில வருடங்களிலேயே பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல திரைப் பிரபலங்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அதோடு தொடர்ந்து விஷ்ணுவிஷால் ஜுவாலா கட்டாவுடன் மிகவும் நெருக்கமான இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்.
தொடர்ந்து தனது கட்டுக்கோப்பான உடலை மெயின்டெயின் செய்து வருகிறார். எனவே பல உடற்பயிற்சி செய்தும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது கடினமான கப்பிங் தெரபி செய்யும் வீடியோவையும். புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.