கையில் சுத்தமா காசே இல்லாத நேரத்தில் நடிகை சமந்தாவுக்கு கைகொடுத்த பிரபல நடிகர் – யார் தெரியுமா.?

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்தவர் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தனித்தனியாக பல்வேறு படங்களில் நடித்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளனர். அப்படி நடிக்கும்போது இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு அது காதலாக மாறி ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்ட பிறகும் சிறப்பாக வாழ்ந்துவந்தனர் இதனால் சிறப்பான ஜோடியாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது நான்கு வருடங்கள் சிறப்பாக ஓடிய நிலையில் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமந்தா ஒரு பழைய பேட்டி ஒன்றில் நடிகர் நாக சைதன்யா பற்றி பேசிய வீடியோ இணைய தள பக்கத்தில் இப்பொழுது வைரலாகிய வண்ணமே இருக்கின்றன. அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா..

நாக சைதன்யா செல்லமாக சாய் எனக் கூப்பிடுவார் ஒரு ஹஸ்பெண்ட் மெட்டிரியல் என்னிடம் எதுவுமே இல்லாத காலகட்டத்தில் இருந்து அவர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் அமெரிக்காவில் இருக்கும்போது என் அம்மாவுக்கு போன் செய்ய காசு இல்லாமல் இருந்தேன் அப்பொழுது அவரிடம் போன் வாங்கி தான் போன் செய்தேன் அந்த நிலையில் இருந்து தற்போது வரை அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி பாதி தான் தெரியும் ஆனால் என்னைப் பற்றி முழுமையாக அறிந்த ஒரு மனிதனாக நான் செய்த மிக மிக மோசமான தவறுகள் அவர் பார்த்திருக்கிறார். என சமந்தா தெரிவித்தார்.

இப்படி நாக சைதன்யா குறித்து பேசிய சமந்தா திடீரென விவாகரத்து பெற்று பிரிந்து ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.