வெற்றி படத்தை கொடுக்க சுந்தர் .சி -யை சுற்றி வரும் பிரபல நடிகர்.! வேற வழில்ல.

sundar c and kusboo
sundar c and kusboo

தமிழ் திரை உலகில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குபவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் நடிகராகவும் ,இயக்குனராகவும், பாடகராகவும் பணியாற்றி வருகிறார் இப்படி பல துறைகளில் பணியாற்றி வரும் இவருக்கு என்னவோ மிகவும் பிடித்தது இயக்குனர் வேலை தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவுலகில் முறை மாப்பிள்ளை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தினை தொடர்ந்து நடிகராகவும், இயக்குனராகவும் முறைமாமன் என்ற திரைப்படத்தில் தோன்றினார் இதையடுத்து அவர் தமிழ் சினிமா உலகில் யாரும் எதிர்பார்க்காத படங்களை கொடுக்க தொடங்கினார் அந்த வகையில் இவர் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, ஜானகிராமன், அருணாச்சலம், சுயவரம், உன்னை தேடி, அன்பே சிவம் போன்ற சிறப்பான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

இப்படியே வலம் வந்து கொண்டிருந்த இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியான குஷ்புவை அவர்களை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் மேலும் அவர் தமிழ் சினிமா உலகிற்கு சிறப்பான பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் சுந்தர்சி இவரை நம்பி பல இளம் நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் தற்போது காத்துக்கொண்டு உள்ளவர்தான் ஜெய்.

இவர் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தற்போது காத்து கொண்டு இருக்கிறார். சுந்தர்சி தற்போது அரண்மனை3 படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் தற்பொழுது குஜராத் அருகில் உள்ள அரண்மனை ஒன்றில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இல்லாததால் அதனை தள்ளி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் ஒரு படத்தை எடுத்து விடலாம் என்று எண்ணி தான் தற்போது ஜெய்யுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகிறது இதன்மூலம் ஜெய்க்கும் மற்றும் சுந்தர் .சி க்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது இதனை சரியாக பயன்படுத்தி கலகலப்பு 3 உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.