சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்கள் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலயில் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கிய மாநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நல்ல பெயரை பெற்று விட்டதால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்தார். அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தற்பொழுது நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வசூலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் விக்ரம் திரைப்படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது அது மட்டுமில்லாமல் காமாலை நீண்ட காலம் திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு புதுவிதமான கமலைப் பார்த்ததும் ஒரே கொண்டாட்டம்தான்.
இதனால் படம் வெற்றி பெற்றதால் கமல் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஒரு புதிய கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என கூறப்படுகிறது இதன் அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதாவது கைதி திரைப்படத்திற்கு பிறகு நீங்கள் கார்த்தி உடன் பேசுவீர்களா என கேட்டுள்ளார்.
அதற்கு லோகேஷ் கனகராஜ் அவருடன் நான் படம் செய்து முடித்த பிறகு என்னிடம் ஃபோன் பேசுவார் படம் ஹிட்டாகி விட்டது நிதானமாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறினாராம் மேலும் இத்தனை ஹிட் திரைப்படங்களை கொடுத்தாலும் எந்த ஒரு தலைகனமும் இல்லாமல் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.