விஜய் போல் நடித்து அசத்திய பிரபல நடிகர் – கோபப்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை நிறுத்திய சசிகுமார்.!

SASIKUMAR
SASIKUMAR

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக வெற்றி கண்டவர் சசிகுமார் இப்பொழுது இவரது படங்கள் பெருமளவு வெற்றி பெறுவதில்லை ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் இதுவரை வெற்றி படங்களாக தான் இருந்து வந்துள்ளன.

அந்த வகையில் சசிகுமார் இதுவரை சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் ஜெய், சுவாதி, கஞ்சாகருப்பு, சமுத்திரகனி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே..

நடித்து படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் காதல் சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் இந்த திரைப்படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெய், சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகிய மூவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை எடுக்க நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ரொம்ப மெனக்கெட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடிக்கும் போது சசிகுமாருடன் நிறைய திட்டு வாங்கியிருக்கிறார். அதை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜெய் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து அறிமுகமான போதிலிருந்து அப்படியே விஜய் போலவே நடிக்க ஆரம்பித்து இருந்தேன். அதனால் சுப்பிரமணியபுரத்தில் நடிக்கும்போது விஜய் போலவே நடித்துள்ளேன் இதைப் பார்த்த இயக்குனர் சசிகுமார் டென்சனாகி விட்டாராம் அவர் கூறியது.

JAI
JAI

இந்த படத்தின் கதை என்பது காலகட்டங்களில் நடப்பது போன்று உருவாகிறது அதனால் நீ விஜய் போல் நடிக்கவே கூடாது ஏனென்றால் அப்போது விஜய்யே கிடையாது. அதனால் நீங்கள் நீங்களாகவே நடிக்கவேண்டும் என கூறி உள்ளார் அதன்பிறகு சசிகுமார் கஷ்டப்பட்டு ஜெய்யை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜெய் கூறியிருந்தார்.