சினிமாவில் உள்ள நடிகர்கள் நடிகைகள் மேலுள்ள ஆசையால் பலமுறை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டு கேவலப்பட்ட பிரபல நடிகரைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது அந்தப் படத்தின் நடிகரை தங்க வைக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தனக்குத் தெரிந்தவர் வீட்டில் அந்த நடிகரை தங்க வைத்துள்ளார். சாப்பிட்டுவிட்டு படப்பிடிப்பில் தளத்திற்கு சென்று தனது வேலையை முடித்து விட்டு வருவார்.
இதேபோல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் அந்த நிலையில் அந்த நடிகர் அந்தப் பெண்ணின் மீது ஆசை கொள்கிறார்.
இதை அந்த தயாரிப்பாளரிடம் அந்தப் பெண்ணை எனக்கு ரொம்ப பிடித்திருப்பதாகவும் அந்தப் பெண்ணை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு சற்று தயங்காத தயாரிப்பாளர் அவ்வளவுதானா நான் வேற என்னமோ ஏதோ என்று நினைத்து உள்ளேன் என்று கூறி இருக்கிறார்.
இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இதைப் பற்றி அந்த நடிகர் தங்கி இருந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணிடம் உங்களைப் பற்றி சார் நல்லபடியாக கூறியிருக்கிறார் என்றும். படப்பிடிப்பு தளத்தில் உங்களைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும். கூறியிருக்கிறார் அதன் பிறகு இன்னும் ஒரு சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் அதன் பிறகு நாங்கள் இந்த இடத்தை காலி செய்துவிட்டு கிளம்பி விடுவோம் என்று கூறியது மட்டுமல்லாமல். இன்று ஒரு நாள் மட்டும் அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் டபுள் மீனிங் ஆக கூறி இருக்கிறார்.
அதற்கு உடனே அந்தப் பெண்ணும் சரி சார் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நடிகருக்கு பெரிய விருந்து வைக்கும் விதமாக பலவிதமான சாப்பாடுகளை செய்துள்ளார் உடனே அந்த நடிகர் வந்தபோது சாப்பிட வாங்க சார் என்று கேட்டுள்ளார் அதற்கு அந்த நடிகர் எனக்கு தலை வலிக்கிறது படுக்கை அறை எங்கே உள்ளது என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் அந்த படுக்கையறையை காட்டி விட்டு இந்த வசதி உங்களுக்கு போதுமா சார் என்று கேட்டுள்ளார். அந்த நடிகர் இந்த வசதி எனக்கு போதுமானால் ஒரு குறை இருக்கிறது என்று கூறியுள்ளார். அது என்ன குறை சார் என்று அந்தப் பெண் கேட்க நீங்களும் இந்த படுக்கையில் படுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
உடனே அந்தப் பெண் கோபப்பட்டு உங்களை என்னமோ ஏதோ என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் எவ்வளவு கீழ்த்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்க கூட இல்லை. உங்கள் மீது நல்ல மரியாதை வைத்திருந்தேன் அதையும் ஒரே நிமிடத்தில் தவிடு பொடியாக ஆக்கி விட்டீர்கள். என்று சரட்டு மேனிக்காக அவரைத் திட்டி தீர்த்து முதலில் நீங்கள் இங்கே இருந்து கிளம்புங்கள் என்று கூறிவிட்டார்.
உடனே அந்த நடிகரும் எதுவும் பேசாமல் மௌனமாக அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர் இதைப் பற்றி கூறியிருக்கிறார். அந்த தயாரிப்பாளர் நான் அவர் அட்ஜஸ்ட் செய்து விடுவார் என்று எண்ணினேன் ஆனால் இப்படி பேசி இருக்கிறார் என்று அந்த நடிகரை சமாதானப்படுத்தி அங்கு இருந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.