கமல் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் அதிகாரபூர்வ அறிவிப்பு.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் சிவகார்த்திகேயன் இவர் முதன்முதலில் வெள்ளித்திரையில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மூன்று என்ற திரைப்படத்தில் தனுசுடன் நடித்திருந்தார். மேலும் இவர் நடித்த மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படங்கள் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.

இவர் நடித்த திரைப்படம் வெற்றியடைந்ததால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு சிவகார்த்திகேயன் அசுர வளர்ச்சி அடைந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் டாக்டர் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

மேலும் சிவகார்த்திகேயன் அயலான், டான் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படத்தில் பாடல்களையும் பாடியுள்ளார். இப்படி பன்முகத் திறமை கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது கமலஹாசனுடன் இணைய இருக்கிறார்.

கமலஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் இதுவரை பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது அந்த வரிசையில் தற்பொழுது ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த படைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி கமல் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு இருபத்தி ஒன்றாவது திரைப்படமாக அமைய இருக்கிறது.அதேபோல் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் 51வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில வேலைகள் சந்தோஷத்தை தரும் சில கௌரவத்தையும் பெருமையையும் தரும் சோனி பிக்சர் ஃபிலிம்ஸ் ராஜ் கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் அனைவருக்கும் பெருமை தேடித்தரும் தம்பி சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் போன்ற இளைஞருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என கமலஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சிவகார்த்திகேயனின் இந்த திரைப்படத்தை ராஜ்குமார் தான் இயக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. இதோ  அதிகாரபூர்வ அறிவிப்பு.