லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து எடுத்து வரும் திரைப்படம் தான் விக்ரம். இந்த படம் முற்றிலும் வித்தியாசமான திரைப் படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஏனென்றால் இந்தப் படத்தில் அந்த அளவிற்கு பல டாப் நடிகர்கள் கமலுடன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர் அதேசமயம் இந்த படத்தில் பல இளம் நடிகைகள் நடிக்கின்றனர் ஷிவானி நாராயணன், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி போன்ற பலர் நடிக்கின்றனர். விக்ரம் படத்தின் ஷூட்டிங் முன்புறமாக எடுக்கப்பட்டு வருகிறது.
ஒருவழியாக படம் நிச்சயம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஏனென்றால் பல தடவை சொல்லி இருக்கிறார் லோகேஷ் இந்த படம் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு சமம் அந்த அளவிற்கு மிக சிறப்பாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சிறப்பான சம்பவம் நடந்து உள்ளது அதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நரேன் விளக்கி சொல்லி உள்ளார். கமலை பார்த்து தான் நான் சினிமா உலகில் நடிக்கணும்னு ஆசையோடு வந்தேன். இப்போ கமல் சாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிக பாக்கியம் என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்து உள்ளது அதாவது நடிகர் நரேன் கமலை பார்த்து சின்ன டயலாக் பேச வேண்டும்.
ஆனால் அவரைப் பார்த்தாலே நரேன் பயந்து போய் உளறி விடுவாராம் இதுபோல பல தடவை டேக்குகள் போனதாம் ஒருகட்டத்தில் கடுப்பான லோகேஷ் நீங்கள் நன்றாக தான் பேசுகிறீர்கள் ஆனால் கமலை பார்த்து பயப்படுகிறீர்கள் என கூறியுள்ளனர் உண்மையில் எனக்கு கமலை பார்த்தால் பயம் வருகிறது என கூறியுள்ளார் நரேன். ஒரு வழியாக அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்துள்ளார் நிச்சயம் விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக வரும் எனவும் கூறினார்.