சூப்பர் ஸ்டார் ரஜினி திரைப்படத்தையே நிராகரித்த பிரபல நடிகர்.! சான்ஸ் கிடைத்ததே என்று என்னால் இயக்க முடியாது.! ஆச்சரியத்துடன் பார்க்கும் ரசிகர்கள்

rajini
rajini

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் திரைப்படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போடுவார்கள் அதுமட்டுமில்லாமல் ரஜினி திரைப்படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என பல நடிகைகளும் ஆசைப்படுவார்கள் அந்தளவு சினிமாவில் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் ரஜினியின் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்துள்ள தகவல் தற்பொழுது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது அவர் வேறு யாரும் கிடையாது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்.

2005 ஆம் ஆண்டு வெளியாகிய கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரித்திவிராஜ். மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும் ,நினைத்தாலே இனிக்கும் ராவணன், காவியத்தலைவன் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார் அந்த வகையில் 2019ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது அது மட்டும் இல்லாமல் லூசிபர் திரைப்படத்தை பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் அந்த அளவு மிகவும் துள்ளியமாக இயக்கியிருந்தார் பிரித்திவிராஜ். இந்த நிலையில் நடிகர் பிருதிவிராஜ் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் ரஜினிகாந்தின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அப்பொழுது சரியான கதை தன்னிடம் இல்லை என கூறிவிட்டார்.

பல இயக்குனர்கள் ரஜினியை வைத்து இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததும் வாய்ப்பு கிடைத்ததே என ஏதாவது ஒரு கதையை வைத்து படத்தை இயக்கி விடுவார்கள் ஆனால் ரஜினியின் ரசிகனாக தான் இயக்கும் திரைப்படம் தனக்கு பிடித்து விடாமல் போகுமோ என எண்ணி பிருத்திவிராஜ் மறுத்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஏற்ற கதை தோன்றினால் அவரை கூடிய விரைவில் அணுகுவேன் எனவும் கூறியுள்ளார்.

பிரித்திவிராஜ் தற்போது கடுவாய் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.