நடிகர் ஜெயராம் தமிழ் மொழியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார். இவர் 90 காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் பல ஹிட் அடித்துள்ளது. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பல குரலில் பேசும் கலைஞர்.
மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், பஞ்சதந்திரம், துப்பாக்கி என ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் காமெடி கலந்த நடிப்பால் ரசிகர்கள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழில் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமஸ்கிரத மொழியில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் முத்து திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு காரணம் என்ன என்பதை கூறியுள்ளார்.1995ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் முத்து இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீனா ரகுவரன் சரத்பாபு ராதாரவி செந்தில் வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படத்தில் சரத்பாபு அவர்கள் ரகுவரனின் மகனாக நடித்திருப்பார் இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் சரத்பாபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ஜெயராம் தான் அவர் அளித்த பேட்டியில் முத்து திரைப்படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க இருந்தேன் ஆனால் அந்த திரைப்படத்தில் சரத்பாபு அவர்கள் ரஜினியை கன்னத்தில் அறைந்து இருப்பார் அந்த மாதிரி காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டேன்.
ரஜினியை கன்னத்தில் அறைவது போல் நடித்தால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருப்பேன். அதேபோல் கமலுடன் தெனாலி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கமலை அறைந்திருபீர்கள் என கேட்கத் தோன்றுகிறதா நான் கமலுடன் இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்ததாள் அவருடன் இணைந்து நடிப்பதில் எனக்கு ஒரு கஷ்டமாக தெரியவில்லை எனக் கூறியுள்ளார் இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.