நயன்தாராவுடன் கிரிக்கெட் ஆடும் பிரபல நடிகர்.? இணையும் புது கூட்டணி

nayanthara-
nayanthara-

தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் இவர் ஐயா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக மாறியதை எடுத்து அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார் நடித்தும் வருகிறார்.

திரை உலகில் ஓடிக்கொண்டிருந்த இவர் முதலில்  பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் லெவலுக்கு சென்றார் ஆனால் சில கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்து அடுத்ததாக நயன்தாரா சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார் இப்படியே போனால் தனது சினிமா மார்க்கெட்டுக்கு பிரச்சனை நேர்ந்து விடும் என கருதிக் கொண்ட நயன்தாரா இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் தற்போது இரு மகன்கள் இருக்கின்றனர். இப்போ எந்த பிரச்சனையும் இல்லாமல் நயன்தாரா  படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கைவசம் ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மற்றொரு திரைப்படத்திலும் நயன்தாரா கமிட்டாகி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

நயன்தாரா கிரிக்கெட்டை வைத்து தயாராகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்க உள்ளார். தயாரிப்பாளராக காவிய தலைவன், இறுதி சுற்று, வா,  காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை தயாரித்த இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் அதுவும் முதல் படமே நயன்தாராவை வைத்து எடுக்க உள்ளார்.

இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கிறார் என கூறப்படுகிறது மேலும் நடிகர் சித்தார்த்தம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க இருக்கிறாராம் இந்த படத்திற்கு “தி டெஸ்ட் ” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நயன்தாராவும், மாதவனும் முதல் முறையாக இந்த படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.