சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது மேலும் தொலைக்காட்சிகளும் பல சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளாக இருந்து வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்தான் ஆலியா மானசா. இந்த சீரியலினை தொடர்ந்து மீண்டும் ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகத்தில் நடித்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும் தற்பொழுது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க இருக்கும் இவர் விஜய் டிவியின் சீரியல்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சன் டிவி சீரியல்களுக்கு தாவி உள்ளார்.
அதாவது இவர் சன் டிவியில் புதிதாக அறிமுகமாக இருக்கும் இனியா என்ற சீரியலில் நடிக்க இருக்கிறார் இந்த சீரியல் கதாநாயகியாக நடிக்கும் இவருக்கு ஒரு அக்கா மற்றும் அப்பா மேலும் இவருடைய அம்மா இறந்து விடுகிறார் இவர்களின் மூன்று பேரையும் மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக இவருடைய கணவர் சஞ்சீவ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
சஞ்சீவ் தற்பொழுது சன் டிவியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார் இதன் காரணமாக இவர் தற்பொழுது இனியா சீரியலில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனவே ஆலியா மானசாவுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது பற்றி அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது இனியா சீரியலில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக நடிகர் ரிஷி நடிக்க இருக்கிறார். ரிஷி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த டீலா நோ டீலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்காது. இவர் சமீப காலங்களாக சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இனியா சீரியலின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.