தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அட்லீ தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். தற்பொழுது தமிழை தாண்டி ஹிந்தி பக்கம் அடி எடுத்து வைத்து ஜவான் என்னும் படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோவாக ஹிந்தி டாப் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் மேலும் விஜய் சேதுபதி சானியா மல்கோத்ரா யோகி பாபு பிரியா மணி மற்றும் பல ஹிந்தி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது ஷாருக்கானும் விஜய்யும் சந்திக்கும் காட்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஜவான் பட குழுவுக்கு பிரபல சூப்பர் ஸ்டார் ஒருவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்த ஹீரோ வேறு யாருமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அவர் தற்பொழுது தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஜவான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அனைவருக்கும் சப்ரைஸ் கொடுத்துள்ளார் மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானை சந்தித்து சில மணி நேரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசி உள்ளார் அதன் பிறகு இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..