famous actor miss mugamoodi movie information viral: தமிழ் திரையுலகில் சூர்யாவின் ரசிகர்கள் தற்போது சூர்யாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
ஏனென்றால் சூர்யாவின் சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சூர்யாவைப் பற்றி ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த தகவல் என்னவென்றால் சூர்யா ஒரு படத்தை தவற விட்டாராம்.
அதாவது கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முகமூடி.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் கதாநாயகனாக நடிக்க முதலில் சூர்யாவை தான் அணுகினாராம் ஆனால் சூர்யா ஒரு சில காரணங்கள் குறித்து இந்த படத்தை நழுவ விட்டாராம் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.