90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா அப்பொழுது உள்ள படங்களில் கனகா இல்லை என்றால் பலரும் வருத்தப்படுவார்கள் அந்த அளவு கனகா மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியாகிய கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.
தான் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியதால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிக எளிதாக அடைந்தார். அதுமட்டுமில்லாமல் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி மிகவும் பிரபலம். இன்று கரகாட்டக்காரன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் போட்டால் கூட மக்கள் பலரும் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமான திரைப்படம்.
அதேபோல் பல நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற அந்தஸ்தையும் அடைந்த திரைப்படம். கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் கனகா நடிக்க ஆரம்பித்தார். அப்பொழுது உள்ள இலசுகளில் மத்தியில் கனகா மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்த நிலையில் கனகா நடித்து வந்த படங்களில் அவருடன் நடித்த நடிகர் ராமச்சந்திரன் கனகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் ராமச்சந்திரனின் அப்பா மறைந்த பிறகு அவருக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்துள்ளார் ஆனாலும் கனகாவை காதலிப்பதை விடவில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை என்றாலும் கனகாவை துரத்தி துரத்தி காதலித்து உள்ளார்.
கடைசி வரை கனகா ராமச்சந்திரனை கண்டு கொள்ளவே இல்லை. தானுண்டு தன் சினிமா உண்டு என படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்து விட்டார் கனகா. ராமச்சந்திரன் தன்னை காதலித்தது கூட கனகாவுக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை ஒருவேளை காதலித்தது தெரிந்திருந்தால் கனகா ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பது அவரின் மனநிலையை பொறுத்து தான்.
கனகாவை உருகி உருகி காதலித்த ராமச்சந்திரனின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் பலரும் கவலைப்பட்டு வருகிறார்கள்.