தளபதி விஜய்யுடன் 6 -வது முறையாக கைகோர்க்கும் பிரபல நடிகர்.! தலைவன் ரொம்ப பிஸியான ஆளாச்சே….

vijay
vijay

தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் அவருக்கு 66 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக வம்சி இயக்கி வருகிறார் தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக மீண்டும் ஒருமுறை லோகேஷ் உடன் கைகோர்த்து  தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாக லோகேஷ் ஏற்கனவே சொல்லிவிட்டார்.  இந்த படத்தில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வில்லன்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதேசமயம் இந்த படத்தில் திரிஷா, சமந்தா போன்றவர்களும் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது .

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்பான காட்சியில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவையும் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதிக படங்களில் கமிட்டாகி இருக்கும் நடிகர்களில் ஒருவராக யோகி பாபு இருக்கிறார் தற்பொழுது அவரது கைவசம் 31 படங்கள் கிட்டத்தட்ட இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 67 படத்திலும் அவர் கமிட்டாக இருக்கிறாராம். யோகி பாபு விஜய் உடன் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் அந்த வரிசையில் தளபதி 67 இருக்கும் என கூறப்படுகிறது. தளபதி விஜய் உடன் இதுவரை 5 படங்களில் நடித்துள்ள யோகி பாபுவுக்கு இந்த படம் 6 வது படமாகும். அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கும் என செய்திகள் வெளி வருகின்றன.