Ilavarasu : தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்திருப்பவர் இளவரசு. இவர் முதலில் ஒளிப்பதிவாளராக 13 படங்களில் பணியாற்றி முதல் மரியாதை படத்தில் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது முக்கிய வேடங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விடுதலை.. வாத்தி என சொல்லிக் கொண்டே போகலாம்..
இப்படிப்பட்ட இளவரசு குய்கோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். . அதில் அவர் லியோ, ஜெயிலர் படம் வசூல் குறித்து பேசி உள்ளார்.. இன்று நிலைமையே மாறிடுச்சு.. அப்பொழுதெல்லாம் உலக அளவில் வசூல் 35 லட்சம் என்றாலே அதை பெரிதாக பார்த்தோம் இன்றைய நிலைமையே வேற..
ஜெயிலர், லியோ படம் எல்லாம் ரூ. 500 கோடி, ரூ.600 கோடி என்று சொல்றாங்க ஆனா அது நிஜமா இல்ல வெறும் நம்பர் தானா என்று எனக்கு தெரியல எனக் கூறினார். மேலும் பேசிய இளவரசு.. அப்பொழுதெல்லாம் தியேட்டர்கள் குறைவு காட்சிகள் குறைவு.. 100 நாள் ஓடினால் வரும் வசூலை முதல் நாளே செய்து விடுகிறது. இதை காலத்தின் மாற்றமாக தான் பார்க்க வேண்டும் என கூறினார்.
தியேட்டரில் முன்னணி நடிகர்கள் படங்கள் தவிர்த்து குறைவான பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுத்தாலும் ஓட மாட்டேங்குது ரொம்ப கஷ்டப்படுது மலையாளத்தில் நல்ல கதைகளை மக்கள் வரவேற்கின்றனர் அதேபோல இங்கேயும் ரசிகர்கள் ரசனை கமர்சியலில் இருந்து சற்று மாற வேண்டும் என கூறியுள்ளார்.