சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார் ஒரு சில காரணங்களால் மாநாடு திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, அதற்கிடையில் சிம்பு சுசீந்திரன் திரைப்படத்தில் நடித்து முடித்து விடலாம் என நடித்து வருகிறார்.
அந்த திரைப்படத்திற்கு ‘ஈஸ்வரன்’ என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகியது, படத்திற்காக சிம்பு அதிரடியாக உடல் எடையைக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
ஈஸ்வரன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காமெடி நடிகர் பாலசரவணனுக்கு நேற்று பிறந்த நாள் அதை படக்குழுவினர் படப்பிடிப்பிலேயே கேக் வெட்டி கொண்டாடினார்கள், இந்த கேக் வெட்டி கொண்டாடிய விழாவில் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டு பாலசரவணனுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சிம்புவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பாலசரவணன் நன்றி கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது அத்தனை அன்பையும் அள்ளித்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப் பிறந்தநாளை மாற்றியதற்கு அன்பு சிம்பு சகோதரருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல. மாபெரும் வாய்ப்பளித்து தருணத்திற்கு காரணமான இயக்குனர் சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல என பதிவு செய்துள்ளார்.
இந்த தகவலை தற்போது சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு @SilambarasanTR_ Brotherக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🏾🙏🏾மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் #சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🏾🙏🏾 pic.twitter.com/oIcRA1wUOG
— Bala saravanan actor (@Bala_actor) November 2, 2020