பொதுவாக நடிகைகளைவிட நடிகர்களுக்கு தான் பல மடங்கு ஊதியம் அதிகம் மேலும் இயக்குனர்கள் ஒரு சில திரைப்படங்களை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் எந்த நடிகருக்கு அதிக மார்க்கெட் இருக்கிறதோ அந்த நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து வருகிறார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வந்த திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்து விட்டால் ஒரு சில நடிகர்கள் இயக்குனர்களை நினைத்து அதற்கான சம்பளத்தை வேண்டாம் என கூறி விடுவார்கள் இன்னும் ஒரு சில நடிகர்கள் அடுத்த படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்துக் தருபவர்களும் உண்டு அந்த வகையில் ஹாலிவுட்டல் பிரபல நடிகர் ஒருவர் படத்தோல்வினால் ஊதியம் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
ஆம், ஹாலிவுட்டில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப் ‘என்ற திரைப்படத்தினை தழுவி பாலிவுட்டில் :லால் சிங் சத்தா: என்ற திரைப்படம் உருவாகி இருந்தது இந்த திரைப்படத்தினை ஹிந்தியில் நடிகர் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் இவரை தொடர்ந்து கரீனா கபூர், நாகசைதன்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து அத்வைத் சித்தன் இந்த படத்தினை இயக்கியிருந்தார் மேலும் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று திரையரங்குகள் வெளியானது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றம் ஏற்பட்டது மேலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை.
மேலும் ‘பாய் காட் லால் சிங் சித்தா’ என்ற ஹாட் டாக் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது இதன் காரணமாக இந்நிலையில் லால் சிங் சத்தா திரைப்படத்திற்கு நடிகர் அமீர்கான் கூதியும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. அதாவது நடிகர் அமீர்கான் தன்னுடைய நடிப்பிற்கான சம்பளத்தை வாங்க முடிவு செய்தால் பட குழுவினர்களுக்கு 100 கோடி நஷ்டம் ஏற்படும் இதன் காரணமாக தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை வேண்டாம் என அமீர்கான் மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இந்த படம் தோல்வி அடைந்ததன் காரணமாக அவர் ஊதியம் வேண்டாம் என கூறியுள்ளார்.