நடிகர்களை போலவே பல முன்னணி நடிகைகளும் நேரில் கோபப்பட்டு இருப்பதை பெரும்பாலும் யாராலும் பார்த்திருக்க முடியாது பொதுவாக நடிகர்கள் என்றாலும், நடிகைகள் என்றாலும் திரையில்தான் மிகவும் கோபப்படுவதை பார்க்க முடியும் வெளியில் எப்பொழுதும் அமைதியாக தான் இருப்பார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் கோபப்பட்டு பேசியுள்ளார்கள். தற்பொழுது அந்த லிஸ்டில் யார் யாரென்று பார்ப்போம். அந்த வகையில்,
சிம்ரன் – இவர் இளம் நடிகையாக நடித்து வந்த காலகட்டத்தில் திரையுலகில் உச்சத்தில் இருந்து வந்தார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இந்த நிலையில் சிம்ரன் அவர்கள் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு பிரேக் எடுத்துக்கொண்டு தற்பொழுது வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றிருந்த பொழுது கேமரா இருக்குனு கூட பார்க்காமல் விஜய் ஆதிராஜ் அவர்களை பயங்கரமாக திட்டி விட்டார்கள்.
குஷ்பூ – சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போலவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிஜங்கள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த குஷ்பூ கோபத்தை அடக்கி கொள்ள முடியாமல் மிகவும் ஆக்ரோஷமாக கத்தியுள்ளார்.
மீரா மிதுன் – தற்பொழுது வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம பிரபலமடைந்தார். இவரைப் பற்றி இந்த நிகழ்ச்சியின் மூலமே அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இவர் விஜய் டிவியில் நடைபெற்ற ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்பொழுது இவராகவே ஒரு கன்பர்மேஷன் உருவாக்கி நடுவர்கள் முன்னாடி கோபமாக பேசியுள்ளார்.
ஆயிஷா – சீரியல் நடிகைகளின் முன்னணி நடிகையாக தற்போது சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆயிஷா. தற்பொழுது இவர் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொண்டிருக்கும்பொழுது இவருக்கு தெரியாமல் பிராங்க் செய்தனர் அதனைப் பார்த்து கோபப்பட்டார் இது பராங் என சொல்லி சாரி கேட்டபோதும் கூட இவர் கோபமாக அவர்களை திட்டி விட்டு சென்றார்.
ராதிகா – நடிகர் சங்க தேர்தலின் பொழுது இவருக்கு எதிராக இருந்த நடிகர்களை பொது மேடை என்று பார்க்காமல் சரமாரியாக நடிகர்களை பற்றி கேவலமாக கூறினார் நடிகை ராதிகா.