விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் புகழ்.
தற்பொழுது விஜய் டிவி புகழ் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி அன்று தனது நீண்ட நாள் காதலி பென்சியாவை கரம் பிடிக்க இருக்கிறார் மேலும் சமீபத்தில் இவர் தனது வருங்கால மனைவிக்கு அடையாறில் பங்களா வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
புகழ் மற்றும் பென்சியா இருவருக்கும் செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதால் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு முன்பாகவே ஃப்ரீ வெட்டிங் போட்டோ சூட் எடுத்து அதனை சமீபத்தில் இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார்கள்.
மேலும் தனது வருங்கால மனைவியுடன் சற்று முன் புகழ் ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவில் உனக்கு அடையாறில் ஒரு பங்களா வாங்கி தருகிறேன் என்றும் அந்த பங்களாவை பொருத்தவரை நான் தான் ராஜா நீதான் மகாராணி என்றும் கூறும் காமெடி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் அள்ளி வருகிறது. விஜய் டிவியின் ஒரு சிறு புள்ளியாக தொடங்கிய இவர் தற்பொழுது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் தற்பொழுது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையில் அடுத்த சிவகார்த்திகேயனாக புகழை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு புகழ் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றும் கூறலாம்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.