தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று எதிர்பாராத அளவு வசூலை அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம் கமல் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகியதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த படத்தை மாநகரம் கைதி மாஸ்டர் போன்ற ஆக்சன் படங்களை கொடுத்த லோகேஷ் இயக்கி உள்ளதால் படம் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கணித்திருந்தனர் அதேபோல் படம் வெளிவந்து ஆக்சன் சீன்களில் பின்னி பெடலெடுத்து இருந்தது. படத்தில் கமலுக்கு இணையாக விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா போன்றவர்களின் நடிப்பு மிரட்டும்.
வகையில் இருந்ததால் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் மேலும் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களையும் பாராட்டி வந்தனர். படம் வெளிவந்து 15 நாட்கள் ஆகின்ற நிலையில் உலகளவில் சுமார் 345 கோடி வசூலை பெற்று வருகிறது. இதனால் இந்த படத்தை தயாரித்த கமலஹாசன் தற்போது செம மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மேலும் அதற்காக படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் நடிகர்கள் என ஒரு சிலருக்கு பரிசுகளையும் வழங்கி வந்தார் இந்த நிலையில் நேற்று படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கமலஹாசன், லோகேஷ், அனிருத், உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து வந்தனர்.
இந்தநிலையில் அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 40 வகையான உணவுகள் பரிமாறப்பட்டதாம். அந்த உணவு வகைகள் குறித்த பட்டியலும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சக்சஸ் மீட்டிங்கில் பேசிய லோகேஷ் படத்தின் ஆரம்பத்தில் பந்தியில் ஆரம்பித்து சக்சஸ் மீட்டிங்கில் பந்தியிலே முடிவடைந்துள்ளது எனப் பேசியுள்ளார்.