சினிமா உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் தல அஜித் ஆரம்ப காலகட்டத்தில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்தால் பல இன்னல்களையும், சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டுதான் படிப்படியாக முன்னேறி தற்போது இந்த இடத்தில் இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையிலும் அஜித்தை ஒரு சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பயன்படுத்திக் கொண்டு பின் விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அஜித்தோ பெரிய அளவில் அதை எடுத்துக் கொள்ளாமல் தன்னால் யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக அதிலிருந்து பொறுமையாக பின் வாங்கி விடுகிறார்.
அஜீத் சமீபத்தில் நடித்த திரைப்படங்களை தயாரித்த ஒரு தயாரிப்பாளராக ஒரு சமயத்தில் அஜித்தை விமர்சித்துள்ளார் அந்த செய்தி தான் தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.வேதாளம், என்னை அறிந்தால் ஆகிய திரைப்படத்தை ஏ எம் ரத்னம் என்ற தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். ஆரம்பத்தில் அஜித்தை தன் கையில் வைத்துக் கொள்ள பொறுமையாகவும் நம்பிக்கை வரும்படி பேசியுள்ளார்
இப்படி நல்ல விதமாக பேசிய அஜித் தன் வசப்படுத்திக் கொண்டு என்னை அறிந்தால் வேதாளம் ஆகிய படங்களை தயாரித்தார் படங்கள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்ததால் அப்பொழுது அஜித்துக்கும், தயாரிப்பாளருக்கும் சின்ன மனவருத்தம் ஏற்பட்டது. அதை அப்பொழுதே பேசி சரிசெய்து இருக்கலாம் அதை விட்டுவிட்டு தயாரிப்பாளர் அஜித்தை பற்றி மற்றவர்களிடம் தப்பு தப்பாக பேசி உள்ளார்.
இதை அறிந்த அஜித் இனி அவருடன் படமே பண்ண கூடாது என முடிவெடுத்து தற்பொழுது அவர் நல்லா இருந்துட்டு போகட்டும் ஆனால் நம் எதுவும் சண்டை போடக்கூடாது என கூறிநல்லவிதமாகவே வெளியேறி உள்ளார் என்று செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.