பாலிவுட்டில் இருக்கும் நடிகைகள் பலரும் டாப் நடிகர்களுடன் நடிப்பதற்காக தனது உடம்பை ஃபிட்டாகவும் அதேசமயம் அழகாக வைத்துக்கொள்ள படாதபாடு படுகின்றனர். இவ்வளவு ஏன் சினிமா நேரம் போக நடிகைகள் சாப்பாடு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துவது மற்றும் ஜிம் யோகா என கடந்து தனது உடம்பையும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வருகின்றனர்.
அதேசமயம் அழகுப் பொலிவுடனும் இருக்கும் அவர்கள் பல டிப்ஸ்களை எடுத்துக் கொண்டு வருகின்றனர். இப்படி இருந்தாலும் அந்த அழகுக்கும்,உடம்புக்கும் ஏற்றவாறு பிரம்மாண்ட அதேசமயம் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வலம் வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பாலிவுட் பிரபலங்களான சிலர் கல்யாணத்திற்காக மட்டும் விலை உயர்ந்த போட்டு ஆச்சரியப்படுத்து வழக்கம்.
அந்த வகையில் உயர்ந்த நான்கு புடவைகளை அணிந்தால் பிரபலங்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம். ஷில்பா ஷெட்டி : பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் 2009ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது திருமணத்தில் ஷில்பா ஷெட்டி அணிந்து இருந்த சிவப்பு புடவையின் விலை மட்டும் சுமார் 56 லட்சம் என கூறப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் : பாலிவுட் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் உச்ச நட்சத்திரங்கள் படங்களில் மட்டுமே நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராய் இவர் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் திருமண புடவையில் நுட்பமான மற்றும் நேர்த்தியான காஞ்சிவரம் புடவையை அணிந்திருந்தார் தங்க நிறத்தில் ஜொலித்த அந்த புடவையின் மதிப்பு சுமார் 51லட்சம் ஆகும்.
அனுஷ்கா ஷர்மா : பாலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்து வந்த இவர் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் பஞ்சாப் முறைப்படி திருமணம் நடந்தேறியது. அனுஷ்கா சர்மா அணிந்திருந்த டிரஸ் – ன் விலை மட்டுமே சுமார் 50 லட்சம் என தெரியவருகிறது.
நடிகை ஊர்வசி ரவுத்தேலா : 2015ஆம் ஆண்டு மிஸ் தீவா யுனிவர்ஸ் கிரீடம் பெற்றார் நடிகையாகவும், மாடல் அழகியாகவும் வலம் வருபவர் இவர் நேக்கக்கர் திருமணத்தில் ஊர்வசி உடையை பலராலும் கவர்ந்திழுக்க பட்டது அதேபோல துபாயில் நடந்த ஊர்வசி ரவுத் தேலா உலகில் விலை உயர்ந்த ஆடை அணிந்து இருந்தார் அதன் மதிப்பு 14 கோடி தங்க ஆடையாகும்.