நடிகை ‘திவ்யா ஸ்பந்தனா ‘ ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்த ‘குத்து ‘என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருடைய பெயர் ‘குத்து ரம்யா’ என்று பிரபலமடைந்தது. குத்து படத்தை தொடர்ந்து கிரி, பொல்லாதவன் தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி மற்றும் காதல் 2 கல்யாணம் போன்ற தமிழ் திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் .
இவர் திரைப்படத்துறையில் மட்டும் இன்றி கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு இந்திய காங்கிரஸ் சமூக வலைதள பிரிவு தலைவியாக செயல்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 17 வது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து நடிகை ரம்யா விலகினார். இதனைத் தொடர்ந்து நடிகை ரம்யா தற்போது திரைப்பட தயாரிப்பு மற்றும் படம் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த சூழ்நிலையில்” நடிகை ரம்யா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்” என்ற வதந்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. பல சமூக ஊடகங்கள் இதைப் பற்றிய உண்மையான தகவல்களை முழுமையாக ஆராயாமல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது.
இது குறித்து ரம்யா கூறிய உண்மையான தகவல் “தற்போது நான் ஜெனிவாவில் ஜாலியாக இருக்கிறேன் என்றும், இதுபோன்று வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும்” பொய்யான தகவலை பரப்பிய சோசியல் மீடியாக்களுக்கு பதிலடி கொடுத்தார் . இந்த தகவல் வெளியான பின்னரே ரசிகர்கள் அனைவரும் பெருமூச்சு விட்டு நிம்மதியடைந்தனர்.