mariselvaraj : இயக்குனர் மாரி செல்வராஜ் தொடர்ந்து சமூகத்திற்கு தேவையான படங்களைக் கொடுத்து வெற்றி கண்டு வருகிறார். முதலில் பரியேறும் பெருமாள் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து கர்ணன் படமும் பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து சிறு இடைவேளைக்கு பிறகு உதயநிதி உடன் கைகோர்த்து “மாமன்னன்” என்னும் படத்தை எடுத்திருந்தார்.
படம் ஜூன் 29 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. அவரது மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்ட ரோலில் பின்னி பெடல் எடுத்தனர் குறிப்பாக வடிவேலு, பகத் பாசறை நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்து உள்ளது.
அதன் காரணமாக மூளை முடுக்கெங்கும் மாமன்னன் திரைப்படம் பேசப்படுவது உடன் மட்டுமல்லாமல் தொடர்ந்து வெற்றிநடை கண்டு வருகிறது. அதனால் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை 11 நாள் முடிவில் மட்டுமே 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது மாமன்னன் திரைப்படம்.
இதனால் சந்தோஷத்தில் இருக்கும் படக்குழு தொடர்ந்து மாமன்னன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சிறப்பான சம்பவங்களை வெளிப்படையாக கூறி வருகிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் நடிகை ரவீனா ரவி பற்றி பேசி உள்ளார்.. ஒரு காட்சியில் பகத் பாஸில், ரவீனா ரவி காட்சி எடுக்கப்பட்டது.
அந்த காட்சியில் பகத் பாசிலை கட்டியணைத்து ரொமான்டிக் டயலாக் பேசணும் ரவீனா ரவி.. அப்போது அவரை கட்டிப்பிடித்து முடிந்த பின் சட்டையில் லிப்ஸ்டிக் ஒட்டி இருந்தது உடனே ஷாக்கான நான் என்ன நடந்துச்சி.? உங்களை கட்டிப்பிடிக்க மட்டும் தானே சொன்னேன் என்ன கேட்டதற்கு நான் பண்ணல தானா நடந்துச்சின்னு ரவீனா ரவி கூறியுள்ளார். இதை கேட்ட செல்வராஜ் ஷாக்கானராம். பின் சிஜி -ல் அந்த காட்சியை எடிட் செய்து மாற்றினோம் என கூறினார்.