Fahadh faasil : சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் வெகு சிலரே அந்த வகையில் கமலை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் இடம்பெற்று இருப்பவர் பகத் பாசில்.. இவர் இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு கதையை நன்கு கேட்டு..
அதில் தனக்கு என்ன கதாபாத்திரம் அது எப்படி மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவருடைய படம் ஹிட் அடிக்கின்றன அண்மையில் கூட இவர் நடித்த விக்ரம், மாமன்னன், சூப்பர் டீலக்ஸ், புஷ்பா போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இப்பொழுது பகத் பாஸில் புஷ்பா 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் புஷ்பா 2 படமும் பகத் பாசிலுக்கு வெற்றி படமாக மாறும் என 100% அடித்து கூறுகின்றனர் ஏற்கனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பகத் பாசில் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது பகத் பாஸில் பிற மொழிகளில் நடிக்கும் பொழுது கம்மியான அளவு சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்திற்காக சம்பளத்தை உயர்த்தி உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. புஷ்பா 2 படத்திற்காக சுமார் 6 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட பலரும் பகத் பாசிலுக்கு புஷ்பா 2 சம்பளம் ஓகே தான் என கூறி வருகின்றனர் ஏனென்றால் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் அவர் 100% ஒத்துழைப்பு கொடுக்கிறார் மேலும் அவருடைய படங்கள் வெற்றியும் பெறுகின்றன என சொல்லி வருகின்றனர். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.