தளபதி 67 குறித்து அப்டேட் கொடுத்த பகத் பாசில்.! உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

thalapathy-67
thalapathy-67

வாரிசு திரைப்படம் வெளியானவுடன் அடுத்ததாக தளபதி 67 படத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதன் பிறகு வாரிசு படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்பட அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் தளபதி 67 திரைப்படத்தில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

என்னதான் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தாலும் தளபதி 67 திரைப்படத்திலிருந்து அடிக்கடி தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின்,  விஷால், உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருந்த தளபதி 67 திரைப்படம் தற்போது அக்டோபர் மாதம் ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படம் குறித்து பகத் பாசில் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்டை கூறி இருக்கிறார் அதாவது சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள பகத் பாஸில் இடம் நீங்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பீர்களா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த பகத் பாஸில் தளபதி 67 திரைப்படம் எல்சியு-வில் ஒரு பகுதி தான் ஆகையால் இந்த திரைப்படத்தில் நான் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கு என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் தளபதி 67 திரைப்படம் எல்சியு-வில் இனையுமா? இணையாதா? என்று பலவிதமாக கேள்விகளை எழுப்பி வந்தனர் ஆனால் அவை அனைத்திற்கும் தற்போது பகத் பாசில் பதில் அளித்துள்ளார். இவருடைய இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.