பேஸ்புக்கை ஆட்டிப் பார்த்த ஹேக்கர்ஸ் இதுல எப்படி சுந்தர்பிச்சை சிக்கினார்.?

facebook
facebook

உலக அளவில் மக்கள் பொழுதுபோக்காக அதிக நேரம் செலவிடுவது சமூக வலைத்தளத்தில் தான் அப்படி அதிக நேரம் செலவிடும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளப் பக்கங்கள் அதிக பங்கு வகிக்கின்றன.

இந்த நிலையில் அதிக தொழில் நுட்பம் மென்பொருள்கள் இருந்தாலும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக்கர் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்துள்ளார்கள், இது உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சமூக வலைதளங்கள் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பாதுகாப்பை மீறி ஹேக்கர் செயல்பட்டதால் சமூக வலைதள பக்கம் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது, அவர் மையின் என்ற ஹேக்கர்ஸ் ட்விட்டர்  கணக்கில் இருக்கும் ஃபேஸ்புக் கணக்குகளை மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் ஹேக் செய்துள்ளார்கள், இதனை பேஸ்புக் நிறுவனமே உறுதி செய்துள்ளது ஆனால் அதை திரும்பப் பெற்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

அவர் மயின் ஹேக்கர்கள் உலக அளவில் உள்ள பிரபலங்களின் சமூகவலைத்தள பக்கங்களை ஹாக் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது அதில் முக்கியமாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணக்கையும் ஹேக் செய்துள்ளார்கள், இவர்கள் பிரபலங்களின் செய்திகளை திருடுவது நோக்கம் இல்லையாம், இப்படி சேஃப்டி இல்லாமல் இருக்கிறது என்பதை குறிப்பிடவே இவ்வாறு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.