பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக அஜித், விஜய், ரஜினி, கமல், திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பொதுவாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அதிலும் குறிப்பாக பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்களை பார்க்க சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு கூட்டம் குவியும். அந்த சமயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றி கூடுதல் கட்டணம் பெற்று விடுகிறார்கள். அப்படி கூடுதல் கட்டணம் பெற்றால் தற்போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
திரையில் வெளியாகும் படத்தை பார்க்க செல்லும் ரசிகர்களிடம் சொன்னதை விட கூடுதால் கட்டணம் பெற்றால் உண்டனடியாக அந்த திரையரங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு சிங்கம் 3 மற்றும் பைரவா போன்ற பல திரைப்படங்கள் பண்டிகை தினத்தில் வெளியாகி இருந்தது இந்த படங்களை பார்க்க விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் குவிய ஆரம்பித்தது இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தத. அப்போது கூடுதலாக வசூலிக்கப்பட்ட திரையரங்கில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திரையரங்கில் சொன்ன கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.