21 வயது சிறியவராக இருந்தாலும் தயங்காமல் காலில் விழுந்தாரா ரஜினி.? சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

rajinikanth
rajinikanth

Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்படி ஜார்கண்ட் சென்று மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் காங்கிரஸ் எம்எம்ஏ அம்பா பிரசாத் போன்றவர்களை சந்தித்தார்.

இவர்களை தொடர்ந்து உபியில் ஆளுநர் ஆனந்திபென் பர்த்டே, துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஆகியோர்களை சந்தித்து பிறகு முதல்வர் யோகியை சந்திக்க சென்றார். அப்படி மாலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு சென்று யோகியை சந்தித்தார் ரஜினி. காரில் இருந்து இறங்கி வந்த ரஜினியை வரவேற்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் வீட்டு வாசலுக்கு வந்தார்.

அவரை கண்டதும் ரஜினி சட்டென்று காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதன் பிறகு பூங்கொத்தும் சிறிய விநாயகர் பிள்ளையையும் பரிசாக வழங்கினார். இவ்வாறு ரஜினிகாந்த் ஆதித்யநாத்திடம் ஆசிர்வாதம் வாங்கியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஏனென்றால் யோகி ஆதித்யநாத் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட 21 வயது சிறியவர் தன்னைவிட சிறியவரிடம் ஏன் இவ்வளவு குனிந்து பணிவாக ஆசீர்வாதம் வாங்கினார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

எனவே இது குறித்த வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் இதற்கு தற்பொழுது ரஜினியின் ரசிகர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, ரஜினி ஆன்மீகத்தில் ரொம்ப ஈடுபாடு கொண்டவர் என்பதால் சாமியாரை கண்டாலே காலில் விழுந்து வணங்கி விடுவாராம். சாமியார்கள் விஷயத்தில் வயது வித்தியாசம் எல்லாம் பார்க்கும் வழக்கம் ரஜினிக்கு கிடையாதாம் யோகி சாமியாராக இருப்பதினால் தான் ஸ்பெஷல்லாக பணிவுடன் நடந்து கொண்டதாக கூறியுள்ளார்கள்.