சமீபகாலமாக எடுக்கப்படும் திரைப்படங்கள் பலவும் பான் இந்திய திரைப்படங்களாக உருவாகின்றன இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது இதன் மூலம் படக்குழு மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை அல்ல முடியும் என்பதே திட்டமாக இருக்கிறது.
அந்த வகையில் தெலுங்கில் RRR, கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் பான் இந்திய அளவில் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனைகளை படைத்துள்ளது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் இயக்கப்படும் திரைப்படங்கள் பலவும் pan-india படங்களாக தற்போது ரிலீஸ் ஆகின்றன.
அதிலும் ஒருசில திரைப்படங்கள் ரசிகர்கள் இந்திய அளவில் அந்த படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர் அப்படித்தான் தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்தும் மிரட்டும்.
வகையில் இருந்து வந்துள்ளதால் இந்த படத்தை பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது இதனால் இந்திய அளவில் இந்த படத்தை பார்க்க பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு முன்பாக பான் இந்திய திரையுலகமே எதிர்பார்த்த தமிழ் திரைப்படங்கள் என்ன என்பது குறித்தும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி கபாலி அந்த படத்தின் டிரைலர் உள்ளிட விஷயங்கள் இந்திய அளவில் பேசப்பட்டது ரஜினி கமல் படங்களைத் தவிர விக்ரமின் கந்தசாமி மற்றும் சூர்யாவின் ஏழாம் அறிவு, அஞ்சான் போன்ற படங்களும் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த லிஸ்டில் அஜீத்-விஜய் படங்கள் இல்லை என்பதுதான் அவர்களது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.