கோபி ராதிகா திருமணத்தில் பரபரப்பு ட்விஸ்ட்.! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கியா.!

baakiyalakshmi
baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ராதிகா திருமண எபிசோட் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது கல்யாணம் நடக்குமா? பாக்யா கோபியை சந்திப்பாரா ஈஸ்வரி ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்துவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் சீரியலை பார்த்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி தனக்கு கிடைத்த ஆர்டர் என்பதால் யார் என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் தனது வேலையை தொடங்குகிறார் கோபி திருமணத்திற்கு தான் சமைக்க போறோம் என்பது பாக்யாவிற்கு தெரியாது. செல்வி அக்கா ஜெனி என எல்லோரும் மண்டபத்திற்கு கிளம்பி விட்டார்கள். அதேபோல் செல்வி அக்கா மட்டும் யார் திருமணம் பெண் யார் திருமண மாப்பிள்ளை என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

வெளியே இருக்கும் வெல்கம் போர்டை செல்வி பார்க்கிறார் அப்பொழுது எழுத்தை கூட்டி கூட்டி படிக்கிறார் அதில் கோபி வெட்ஸ் ராதிகா என இருக்கிறது அப்பொழுது ராதிகா பெயரை படிப்பதற்குள் மேனேஜர் வந்து விடுகிறார் உடனே செல்வி அக்கா உள்ளே செல்கிறார்.  இந்த நேரத்தில் கோபியும் ராதிகாவும் திருமண மண்டபத்திற்கு வருகிறார்கள்.

அவர்கள் இருவரையும்  சொந்தக்காரர்கள் உள்ளே அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது பாக்யா போன் பேசிக்கொண்டு வெளியே வருகிறார் அவர் குரலை கோபி  கவனிக்கிறார். அதே போல் வீட்டில் இருக்கும் செழியன் எழில் தாத்தாவை தேடுகிறார் அது மட்டுமில்லாமல் ஈஸ்வரி பாட்டி மிகவும் சோகமாக இருப்பதை எழிலும் இனியாவும் கவனிக்கிறார்கள் உண்மையை சொல்ல முடியாமல் ஈஸ்வரி தவிக்கிறார்.

பாக்யா போனை வேகமாக பேச கோபி அதை கவனிக்கிறார். ஆனால் அதற்குள் ராதிகாவின் அண்ணன் அவரிடம் பேசிக் கொண்டு இருக்கிறார் பாக்யாவும் மணமகன் மற்றும் மணமகள் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். தெரிந்தால் பாக்கியாவின் ரியாக்ஷன் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தி தாத்தா திருமணத்தை நிறுத்த என்ன திட்டம் போட்டுள்ளார் என்பது  யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் ஏதோ ஒரு திட்டம் வைத்திருப்பதாக தெரிகிறது அது என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அவளுடன் இருக்கிறார்கள் இனிவரும் எபிசோடுகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.