நடிகை ஸ்ரீதேவியின் ஆசைக் கணவர் போனிகபூர் ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் இவர் தல அஜித்தை வைத்து நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் வலிமை திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் இத்திரைப்படம் ஆரம்பிக்கும்போது தல அஜித்தின் சம்பளம் வெறும் 25 கோடியாக வழங்கப்பட்டது ஆனால் வைரஸ் தாக்கம் அதிகம் ஆனதன் காரணமாக பல்வேறு பிரபலங்களும் படப்பிடிப்புக்கு வருவதற்கு தாமதமானது மட்டுமில்லாமல் நடிப்பதற்கும் பலர் தயக்கம் காட்டி வந்தார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்த பல்வேறு நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு வேறொரு நடிகர்களை வைத்து இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பாகவே வெளியிட வேண்டிய இத் திரைப்படமானது இரண்டு வருடங்கள் படப்பிடிப்பிலே போய்விட்டது.
இந்நிலையில் போனிகபூர் தான் எதிர்பார்த்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனதால் சற்று பதட்டத்தில் உள்ளார். இந்நிலையில் தல அஜித் போனி கபூர் உடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அந்த வகையில் உருவாகும் திரைப்படம் கண்டிப்பாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படமாக தான் இருக்கும் கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் தல அஜித் எப்போதும் தன்னுடன் பணியாற்றுவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார் அந்த வகையில் யாருக்கேனும் நஷ்டம் அடைந்தால் அவர்களுக்காக மற்றொரு உதவி செய்வது வழக்கம் தான் அந்த வகையில் போனிகபூர்க்கு தல அஜித் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.