மாடலிங், சினிமா என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை சோனியா அகர்வால் இப்படி ஓடி கொண்டிருந்த இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக சோனியா அகர்வால்.
ஹிந்தி மற்றும் இங்கிலீஷ் போன்ற படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் கொண்டேன் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டாக அமைந்தன அந்த வகையில் கோவில், மதுர, செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுபயலே ஆகியவை அடங்கும்.
மேலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதோடு சோனியாஅகர்வாலின் நடிப்பு வேற லெவல் இருந்தது. இதனால் இவரை ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் செல்வராகவனை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தினார்.
இருப்பினும் அவரது திருமணம் ரொம்ப நாளைக்கு நீடிக்காமல் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர். இருவரும் தற்போது சினிமாவுலகில் தனித்தனியாக நடித்து வருகின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சோனியா அகர்வால் பேசியது தன்னுடைய குரு செல்வராகவன் என்றும் ஹிந்தி இங்கிலீஷ் மட்டும் தெரிந்தது.
எனக்கு தமிழில் ஒரு சிறந்த நடிகையாக மாற்றியவர் என்றும் எனக்கு நடிப்பு என்பதை சொல்லித் கொடுத்தவரும் செல்வராகவன் தான் எனக் கூறினார். மேலும் இன்றளவும் திவ்யா, அனிதா கதாபாத்திரங்கள் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் செல்வராகவன் என கூறிய அவர்கள் நன்றி தெரிவித்தார்.