தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் நடன இயக்குனராகவும் திரைப்பட இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபுதேவா இவர் சில வருடங்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவுடன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இது ஒருபக்கம் இருக்க தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய கதாநாயகியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகத்தான் குறிக்கப்படுகிறது.
அந்தவகையில் நயன்தாராவின் முன்னாள் காதலன் பிரபுதேவாவும் இப்போது பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் இவ்வாறு அவர் பாலிவுட்டில் நடிக்க போகும் அந்த திரைப்படத்திற்கு ஜர்னி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை ஆஷிஷ் குமார் இயக்க உள்ளது மட்டுமில்லாமல் அஞ்சும் ரவி இத் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த திரைப்படமானது ஆக்ரா ஐரோப்பியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள்.