விஜய்க்கு அம்மாவாக நடிக்க போகும் Ex.MLA – வேற லெவலில் மாஸ் காட்டும் தளபதி 66.

vijay

தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் முதலாவதாக  இருப்பவர் ரஜினி அவருக்கு அடுத்ததாக அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் லிஸ்டில் இருப்பவர்தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான  திரைப்படம் பீஸ்ட். படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்று அசத்தியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து முதல்முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே அவருடன் கைகோர்த்து தனது 66வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் விஜயை தொடர்ந்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் அந்த வகையில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, பிரபு, ஷாம் போன்ற நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய்க்கு அம்மாவாக பிரபல நடிகையை இப்படக்குழு தெரிவுசெய்துள்ளனர்.

காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெயசுதா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வருகிறார் அவர் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழுவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது இதனை அடுத்து ரசிகர்கள் நிச்சயம் தளபதி 66 திரைப்படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெறும் ஏனென்றால் விதையையும் தாண்டி இந்த படத்தில் பல ஜாம்பவான்கள் நடிப்பதால் நிச்சயம் அனைத்து தரப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ஒரு புதிய சாதனை படைக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

jayasutha
jayasutha