சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. இவர் காமெடி செய்யும் விதமே தனி அந்த வகையில் பலர் கிண்டல் கேலி மூலமாக காமெடி செய்த நிலையில் நடிகர் வடிவேலு தன்னுடைய உடல் அசைவில் மூலமாகவே காமெடியில் கலக்கி வந்தவர்.
இவர் திரைப்படங்களில் கூறிய பல்வேறு காமெடி வசனங்களும் என்றும் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இல்லாமல் இன்றும் ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சமீபத்தில் தான் இவருக்கு தடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது நாய் சேகர் இந்த திரைப்படத்தில் மிக பிரமாண்டமாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் நடிகர் வடிவேலுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் தன்னுடைய மகள் மற்றும் மகன் என அனைவருக்குமே எளிய முறையில் எளிய குடும்பத்தில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து வைத்துள்ளார் ஆனால் வடிவேலுவின் மகன் சுப்ரமணியனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தற்சமயம் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கோவையில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து அவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் அவருக்கு எந்த ஒரு வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம். அந்த வகையில் தற்போது தனது தந்தை திரைப்படத்தில் நடிக்க தொடங்கியதன் காரணமாக இனிமேலாவது அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் திரைப்படங்களில் நடிப்பது வழக்கம் தான் அந்த வகையில் வடிவேலு மகனும் ஆசைப்படுவது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய தந்தை அளவிற்கு வடிவேலுவின் மகன் திரையுலகை கலக்குவாரா என்றால் அது தெரியவில்லை.