அஜித்தை பார்த்து எல்லாரும் திருந்துங்க..! சோகத்தில் இருக்கும் தமிழ் தயாரிப்பாளர்கள்.!

ajith
ajith

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தனக்கென ஒரு உதவி ஆட்களை வைத்துக் கொள்வார்கள் அவர் பெயர் தான் மேனேஜர். அவர் அந்த நடிகர் நடிகைகள் எத்தனை மணிக்கு போவார் வருவார் எந்த படத்தில் நடிக்க வேண்டும் என அனைத்து விதமான டீடெயிலும் சொல்லிவிடுவார் அதற்கான சம்பளத்தை அந்த நடிகர் நடிகைகள் கொடுத்துவிடுவார்கள்.

ஆனால் அந்த நடிகர் நடிகைகள் நடிக்கும் பொழுது அவருக்கு மேக்கப் போட உதவியாளர்கள் என பல பேர் வருவார்கள் அவருக்கான செலவுகளை அந்த படத்தின் தயாரிப்பாளர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த நடிகர் நடிகைகளுக்கு பணம் தருவதோடு மட்டுமல்லாமல் அவரது உதவியாளர்களுக்கும் தயாரிப்பாளர் பணம் தருவதால் வேதனையில் இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக விஜய், ரஜினி, நயன்தாரா போன்றவருக்கு உதவி ஆட்கள் அதிகம் அவர்களுக்கு மேக்கப் போடுபவர்களுக்கு மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஆர்ட்டிஸ்டுகள் எப்படி சம்பளத்தை உயர்த்துகிறார்களோ அதே போல உதவியாளர்களும் சம்பளத்தை உயர்த்துவது..

தயாரிப்பாளர்களுக்கு இன்னும் குடைச்சலை அதிகமாக கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட அஜித் வலிமை படத்திற்கு பிறகு உதவியாளரை வெளியில் இருந்து கூப்பிட்டு வராமல் தயாரிப்பாளர் கொடுக்கும் உதவியாளரே போதும் என இருக்கிறாராம். இதை பார்த்த பலரும் அஜித்தின் முடிவு சரியானது என கூறியுள்ளார்..

மேலும் அஜித்தைப் போல மற்ற நடிகர்களும் தயாரிப்பாளர் கொடுக்கும் உதவியாளர்களை வைத்துக் கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு சற்று பண செலவு குறைவு என சொல்லப்படுகிறது இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு எனவும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். அஜித் இப்பொழுது இப்படி முடிவெடுத்துள்ளது போல தெலுங்கு சினிமா உலகிலும் பல்வேறு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.