தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வந்தார் ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக வணங்கான் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கான காரணத்தையும் இயக்குனர் பாலா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
வணக்கம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால் தற்போது சிறுத்தை சிவா இயக்கம் சூரியன் 42 என்ற ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஐந்து கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சூரியா 42 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகிய நிலையில் அதற்கு அப்புறம் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து சூரியா 42 திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வணங்கான் திரைப்படம் முடிந்தவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சூரியா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சூரியா 42 படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபலம் ஒருவர் நடிகர் சூர்யாவை பார்த்து அனைத்து விஷயத்தையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு பேட்டியில் கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
அதாவது தன்னுடைய ரசிகர்கள் யாராவது முதல் டிகிரி படித்து முடித்தவர்களை இரண்டாவது டிகிரி படிக்க வைக்க முழு பொறுப்பையும் சூர்யா அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதேபோல சூரிய ரசிகர்களுக்கு மெடிக்கல் பாலிசி செய்து தருவதாகவும் ரசிகர்களுக்கு அரசு வேலை வாங்க ஏற்பாடு செய்து தருவதாகவும் அந்த பிரபலம் கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடைசி ஐந்து நிமிடத்தில் வந்து திரையரங்கையே தெறிக்க விட்டு உள்ளார் நடிகர் சூர்யா. இந்த நிலையில் தான் ஒரு நடிகர் என்பதைவிட தான் ஒரு பெரிய மனிதர் என்பதை நிரூபித்துள்ளார் என்று அந்த பிரபலம் கூறியுள்ளார்.