90 காலகட்டங்களில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பல காதல் திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது அப்படித்தான் மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ரோஜா இந்த படம் முழுக்க முழுக்க காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் நிறைந்த படமாக இருந்தது.
இந்த படத்தில் அரவிந்த்சாமி மதுபாலா திருமணம் செய்து கொண்டபிறகு காதலிப்பார்கள் அந்த செயல்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே அப்பொழுது சூப்பர் ஹிட்டானது இந்தப் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
இப்படம் பெரிதும் காஷ்மீர் மற்றும் கிராமப்பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும் அவ்வளவு அருமையாக ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பார் மணிரத்தினம் இந்த படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்தில் மதுபாலா கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிகை இருந்தது வேறு ஒரு நடிகை தான் அந்த நடிகை வேறு யாருமல்ல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் தான் எப்படி அந்த வாய்ப்பை விட்டார் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் முதலில் ஐஸ்வரியா பாஸ்கரனை சந்தித்து ரோஜா கதையை சொல்ல முயற்சித்துள்ளார் அப்பொழுது அவரது பாட்டி ஐஸ்வர்யா ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு தொகையை வாங்கி விட்டார் அதனால் அதை மீற முடியாது என திருப்பி அனுப்பிவிட்டாராம் ஆனால் அந்த தெலுங்கு படம் சில காரணங்களால் எடுக்காமல் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது.
மறுபக்கம் மணிரத்தினம் ஐஸ்வர்யா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க மறுத்ததை அடுத்து மதுபாலாவை ஹீரோயினாக புக் செய்து விட்டாராம். பின்பு மதுபாலா வைத்து அந்த படம் முடிககப்பட்டு ரிலீஸ் ஆனது ஐஸ்வர்யாவும் அவரது பாட்டியும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படத்தை பார்க்க போனார்களாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது வயித்தெரிச்சலில் செருப்பை கழட்டி நானே என் தலையில் அடித்துக் கொண்டேன் என கூறினார் மேலும் இப்பொழுது எனது பாட்டி இருந்திருந்தால் அதை கழுத்தை நெரித்து நானே கொன்று விடுவேன் ஏனென்றால் அதனால தான் அந்த நல்ல படம் போச்சு என கூறினார்.