சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் அவரது லுக் மற்றும் நடிப்பு வேற லெவல் இருக்கும் என படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கூறுகின்றனர்.
மாநாடு படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்து தற்போது மற்ற வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்துள்ளார் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப் படத்திற்கு இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா கூடுதல் பலம் சேர்க்கிறார்.
இப்படி இருக்க படக்குழு சமீபத்தில் கான்பரன்ஸ் மீட்டிங் ஒன்றை போட்டு மாநாடு படம் குறித்து பேசியுள்ளனர். இந்த படம் குறித்து வெங்கட் பிரபு சில சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து உள்ளார் அவர் பேசியது.
படத்தில் சிம்புவும், எஸ்.ஜே. சூர்யா சந்திக்கும் காட்சிகள் தனி சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும் என கூறினார் மேலும் சிம்பு ஓடும் காட்சிகளை படம் பிடிக்க காரை பயன்படுத்த வேண்டியது அந்த அளவிற்கு அவர் உடல் எடையை குறைத்து செம சூப்பராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த படத்தில் அனைவரும் புரியும் வண்ணம் விஞ்ஞானம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டைம் லூப் என்ற விஷயத்தை தான் சொல்லி இருப்பதாகவும் வெங்கட்பிரபு கூறி உள்ளார்