வடிவேலு கூட இருந்தா வாழலாம் ஆனா வளர முடியாது..! சோலோ பர்பாமன்ஸில் இறங்கி சொதப்பிய பிரபல காமெடி நடிகர்..!

vadivelu-22

தமிழ் சினிமாவில் மாபெரும் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர்தான் நடிகர் வடிவேலு. காமெடி நடிகர்கள் பலரும் கிண்டல் பேச்சு நக்கல் பேச்சு போன்றவற்றின் மூலமாக நகைச்சுவை செய்து வருவார்கள் அந்த வகையில் தன்னுடைய உடல் அசைவின் மூலமாகவே ரசிகர்களை சிரிக்க வைத்தவர்தான் நடிகர் வடிவேலு.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு சிறு குழந்தை முதல் முதியவர் வரை பல்வேறு ரசிகர் கூட்டங்கள் உள்ளது அந்த வகையில் இவர் செய்த காமெடி வசனங்கள் அனைத்தும் இன்றும் சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் இன்று ட்ரோல் வீடியோ செய்வதற்கும் மீம்ஸ் கிரியேட் செய்வதற்கும் வடிவேலுவின் காமெடி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் வடிவேலுடன் பல்வேறு காமெடி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள் அதில் நமது முத்துக்காளையும் ஒருவர் இவர் சினிமாவில் ஃபைட் மாஸ்டர் ஆக ஆக வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை அந்த வகையில் இவர் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியது மட்டுமில்லாமல் 20 வயதிலிருந்து 50 வயது  வரை உள்ள பல்வேறு தரப்பினருக்கும் கராத்தே வகுப்பு எடுத்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு பல்வேறு ரசிகர்கள் மக்களையும் சிரிக்க வைக்க ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் இவர் செய்த காமெடியில் ரசிகர்களுக்கு பிடித்த காமெடி என்னவென்றால் செத்து செத்து விளையாடுவோமா என்று வடிவேலுவை கூப்பிடும் அந்தக் காட்சியானது என்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடிவேலு சில காலமாக சினிமாவில் நடிக்காததன் காரணமாக அவருடன் நடித்த பல்வேறு காமெடி நடிகர்களுக்கும் வாய்ப்பின்றி இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் சமீபத்தில் வடிவேலுவுடன் நடித்தால் வளர முடியாது என தனியாக பேய் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களை பெருமளவிற்கு கவரவில்லை.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த ஒரு திரைப் பட வாய்ப்பும் இல்லாமல் தவித்து வருகிறார் நமது முத்துக்காளை இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் வடிவேலுவை விட்டு வெளியேறியது தான் காரணம் என்று சமூக வலைதள பக்கத்தில் பேசி வருகிறார்கள்.

vadivelu-2
vadivelu-2