சேர்ந்து நடித்தது போதும்.. படத்தின் மூலம் நேருக்கு நேர் மோத இருக்கும் நயன்தாரா – சிவகார்த்திகேயன்.! யார் மாஸ் – ன்னு தெரிஞ்சிடும்.

sivakarthikeyan-and-nayanthara
sivakarthikeyan-and-nayanthara

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தி வருபவர்கள் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் இவரது வளர்ச்சிகள் இன்றும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

சிவகார்த்திகேயன் கடைசியாக டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது நயன்தாரா கடைசியாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென படங்களில் மூலம்  நேருக்கு நேர் மோத ரெடியாகி உள்ளனர் நயன்தாராவும், சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. நயன்தாராவின் காதன் விக்னேஷ் சிவன்  இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அதே போல சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தில் நயன்தாராவுடன் கைகோர்த்து சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுபோல  டான் திரைப்படத்திலும்  எஸ். ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுதிரகணி, சிவாங்கி, பாலசரவணன் ஆகியவர்களும் நடித்துள்ளனர்.

இரண்டு திரைப்படங்களுமே பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் இந்த இரண்டும் ஒரே நாளில் மோதிக் கொள்ளும் என கூறி வருகின்றனர். இந்த இரண்டு படங்களில் எது ஜெயிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.