80 காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகை கோவை சரளா. இவர் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரம், முக்கிய கதாபாத்திரம், காமெடி என அனைத்திலும் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர். கடைசியாக இவர் நடித்த “செல்வி”..
இந்த திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து மாளிகை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதனால் நடிகை கோவை சரளாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கோவை சரளா சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா குறித்தும்..
தன்னுடன் நடித்த டாப் நடிகர்கள் குறித்தும் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய்யிடம் தான் வியந்து பார்த்த விஷயத்தை கூறியுள்ளார் நடிகர் அஜித், விஜய் வளர்ந்து வந்த காலத்தில் இருந்தே கோவை சரளா நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்..
விஜய் மற்றும் அஜித் அப்பொழுது எப்படி இருந்தார்களோ அதே போல தான் இப்பொழுதும் இருக்கிறார்கள் எனவும் இருவருக்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கிறது அதாவது ஷூட்டிங் 6 மணிக்கு என்றால் 5:00 மணிக்கு எல்லாம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார்கள். வளர்ந்து வந்த காலத்தில் தான் அப்படி இருந்தார்கள் என்று பார்த்தால் இப்பொழுதுமே அவர்கள் தவறாமல் நேரத்தை கடைபிடிக்கின்றனர்.
இதுதான் இவர்கள் இருவரும் உச்ச நட்சத்திரம் ஆக இருப்பதற்கு காரணம்.. அவர்களை பற்றிய ஆயிரம் குறைகள் சொன்னாலும் சினிமாவின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை, மரியாதை தான் இன்று சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திரங்களாக மாறி இருக்கிறனர் இது எப்பொழுதுமே நான் அவர்களிடம் வியந்து பார்க்கும் விஷயம் என நடிகை கோவை சரளா சொல்லி உள்ளார்.