தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறிமாறி திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். அந்த வகையில் பாலிவுட்டில் மட்டும் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமின் மூலம் அறிவித்திருந்தார் இது குறித்து திரை பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் இவருக்கு விரைவில் குணமாக வேண்டும் என கூறி வந்தார்கள்.
மேலும் நடிகை சமந்தாவுக்கு இவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா ஆறுதலாக ஏதாவது கூற வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை அடுத்து சமூக வலைதளத்தின் மூலம் நாக சைதன்யா சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாக சைதன்யாவிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்துக்களும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் அவருடைய சகோதரர் அகில் அக்கினேனி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, ‘டியர் சாம் என குறிப்பிட்டு நீங்கள் குணமாக உங்களுக்கு எல்லா அன்பும், வலிமையும் கிடைக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு நடிகை சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்து இருந்தாலும் நாக சைதன்யா இதற்கு ஏதாவது கூறியிருக்கலாம் ஆனால் அவர் எதுவுமே கூறாத நிலையில் ஆனால் அவருடைய சகோதரர் அகில் அக்கினேனே ஆறுதல் கூறிய நிலையில் அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை கூறி வருகிறார்கள். இதற்கு முன்பு அகில் பிறந்தநாளின் பொழுது சமந்தா அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் கையில் ட்ரிப்ஸ் ஏத்தி கொண்டே படத்தின் டப்பிங் வேலைகளை பார்த்து வருகிறார் இவ்வாறு இவருடைய கடமைக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள் விரைவில் சமந்தா பூரணமாக குணமாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.